7. கணினியின் தலைமுறைகள்

ஆரம்பத்தில் உருவாகியிருந்த கணினிகள் மிகக் குறைந்த பயனைத் தருவதாகவே இருந்தது. மேலும் இதன் அளவு ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவை ஒத்திருந்தது.

இததற்கு பிறகு அடுத்தடுத்த கட்ட வளர்சிகளின் போது கணினிகளின் செயல்திறன் மற்றும் அதன் வேகமும் அதிகரித்தது. மேலும் அதன் உருவ அளவும் படிபடியாக குறைவடைந்து சென்றது. இம்முறையில் நிகழ்ந்த மாற்றங்களை கணினியின் தலைமுறைகள் (Computer Generation) என அழைத்தனர். மேலும் கணினியின் தலைமுறைகள் ஐந்தாக பிரிக்கப்பட்டன.


முதலாவது தலைமுறை

கி.பி 1946 - 1959 வரையிலான காலபகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினிகள் முதல் தலைமுறையைச் (First Generation) சேர்ந்ததாகும்.

இக்கலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட கணினிகளில் வெற்றிடக்க் குழாய்கள் (Vacuum Tube) எனும் தொழிநுற்ற்பம் பயன்படுத்தப்பட்டன. இது அமைப்பில் மிகப் பெரியதாகவும் அதிக திறனுடைய மின்சாரமும் இததற்கு தேவைப்பட்டது. மேலும் இது அதிக இரைச்சலையும் உருவாகியது. இவ்வகையான கணினிகளை இயக்குவுதற்ற்கு மிகப் பெரிய குளிரூட்டிகள் (Air Conditioners) தேவைப்பட்டது. 

எனியாக் (ENIAC - Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதே உலகின் முதலாவது முழுமையான மின்னுலவியல் கணினியாக (Electronic Computer) கருதப்பட்டது. இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது. இதில் 17468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டன. இவற்றை புரிந்து கொள்ள மிகக் கடினமான இயந்திர மொழியிலேயே (Machine Level Language) இயக்க முடியும்


வெற்றிடக்க் குழாய் (Vacuum Tube)


எனியாக் (ENIAC)
 

இரண்டாவது தலைமுறை 

கி. பி. 1959 -1964  வரையிலான காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய கணினிகள் இரண்டாம் தலைமுறையைச் (Second Generation) சேர்ந்ததாகும். இக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட கணினிகளுக்கு திரிதடையம் (Transistor) பயன்படுத்தப்பட்டது.

திரிதடையம் (Transistor) ஆனது வெற்றிடக்க் குலைகளைகளிளிருந்து (Vacuum Tube) முற்றிலும் மாறுபட்ட தொழினுற்ற்பத்தைக் கொண்டிருந்தது. இது அளவவில் சிறியதாகவும், வேகமாகவும் (Faster), நம்பகமானதாகவும் (Reliable), குறைந்த விலைகளிலும் தயாரிக்கக் கூடியதகமும் இருந்தது. 

இதனை ஜோன் பார்டீன் (Jhon Bardeen), வில்லியம் சொக்கலே (William Shockley), வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain) என்பவர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்தக் கணினிகளில் இயந்திர மொழி (Machine Level Language) மட்டுமன்றி  assembly language உம் பயன்படுத்தப்பட்டன.

 திரிதடையம் (Transistor)

 ஜோன் பார்டீன் (Jhon Bardeen)

வில்லியம் சொக்கலே (William Shockley)

 வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain)

 மூன்றாவது தலைமுறை

 கி. பி. 1965 - 1971  வரையிலான காலப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய கணினிகள் மூன்றாம் தலைமுறையைச் (Third Generation) சேர்ந்ததாகும். இக்காலத்தில் அறிமுகப்படுத்திய கணினிகளில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) எனும் தொழில் நுட்ட்பம் பயன்படுத்தப்பட்டது. 

இக்கணினிகளில் மிக அதிகமான திரிதடயதிற்ற்கு (Transistor) பதிலாக ஒரு ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) பயன்படுத்தப்பட்டது. இதனால் கணினியின் அளவு சிரியதாக்கப்பட்டதுடன் மின்சார பாவனையளவும் குறைக்கப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) ஆனது செயல் திறன் அதிகமானதாகும். இன்றைய இலத்திரனியல் சாதனங்களில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனை ராபர்ட் நய்ஸ் (Robert Noyce) உம் ஜாக் கில்பி (Jack Kilby) உம் இணைந்து கண்ண்டுபிடிதிருன்தனர். மேலும் இந்த தலை முறைகளில்தான் High  Level  Language என்ற நவீன பயன்பாட்டு மொழி அறிமுகம் சைய்யப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit)

 ராபர்ட் நய்ஸ் (Robert Noyce)

ஜாக் கில்பி (Jack Kilby)

 நான்காம் தலைமுறை

கி. பி. 1971  முதல் தற்போது வரை உள்ள கணினிகள் அனைத்தும் நான்காம் தலைமுறையைச் (Fourth Generation) சேர்ந்ததாகும்.  இதில் நுண்செயலி (Microprocessor) எனப்படும் தொழினுற்ற்பம் பயன்படுத்தப்படுகின்றது.  

இன்டெல் (Intel) நிறுவனத்தில் பணி புரிந்த டேட் ஹோப்ப் (Ted Hoff) என்பவர்தான் இதனைக் கன்னுடுபிடித்தார். இது ஒருங்கிணைச் சுற்றை (Integrated Circuit) விட மிக அதீத திறன் கொண்டதாக  நுண்செயலி (Microprocessor) விளங்குகின்றது. 

 நுண்செயலி (Microprocessor)


டேட் ஹோப்ப் (Ted Hoff)

 ஐந்தாம் தலைமுறை

 ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) என்பது இன்னும் சந்தைப் படுத்தாத புதிய தொழினுற்ற்ப முறையிலான கணினிகளைக்க் குறிக்கின்றது. இது இன்றைய அதி நவீன கணினிகளைக் காட்டிலும் இவை சிறந்தவையாக காணப்படும். எப்படிஎன்றால் இவற்ற்றால் சுயமாக சிந்திக்க முடியும். இவற்றிக்கு Keyboard, Mouse, போன்ற பாகங்கள் அவசியமில்லை. இவற்றின் Monitor தொடு தன்மை (Touch Screen) உடையன.  இவ்வகையான கணினிகளை Surface Computer என அழைக்கப்படும்.

Surface Computer