1. அறிமுகம்

இன்றைய நவீன உலகை ஆக்கிரமித்துள்ள மிகப் பெரிய இயந்திரங்களில் கணினியானது முதலிடத்தில் உள்ளது. உலகின் சகல தொழில் துறைகளிலும் கணினியின் ஆதிக்கமே அதிகமாகக் காணபடுகின்றது. இதன் காரணமாகவே கணினி அறிவானது அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

ஆனால் இப்போதும் எம்மில் பலருக்கு கணினி அறிவானது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. இததற்கு காரணம் பொருளாதாரம், ஆங்கில மொழியறிவு இல்லாமை, தொழிநுட்ப வளர்ச்சியின் அறிவின்மை என்பன முக்கியமாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே இன்றைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிய கணினி கல்வியை இவ்விணையத் தளத்தில் இலவசமாகவும் இலகுவாக புரிந்து கொள்ளகூடிய வகையிலும் தமிழில் படிக்க கூடிய வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

கற்று பயன் பெருக.