2. ஆரம்பத்தில்

கணினி என்பது சிக்கலான கணிப்பு, தகவல் சேமிப்பு சாதனமாக இனம் காணப்பட்டது. அதாவது கணிதளுக்கான ஒரு கருவியாகவே கணினி ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

கணிதம் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இதனால்தான் கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார்.

எண்களுக்குரிய எழுத்து வடிவம் அறியப்படாமல் இருந்தபோது எவ்வாறு எண்கணித மதிப்பீடுகளை கணித்திருக்கமுடியும் என்பது தற்போது சிந்திப்பதற்கு சிறிது கடினமான விடயம். ஆனால் இப்படியான வசதிகள் மற்றும் எழுத்து வடிவம் என்பன இல்லாதபோது மனிதன் தனது கை விரல்களை உபயோகித்து எண்களை இனம் கண்டான். விரல்களின் எண்ணிக்கையை விட கூடுதலான பொருட்கள் தென்பட்டபோது கற்கள், மணிகள், உலோகங்கள் என்பவற்றின் உதவியை நாடினான். பெரும்பாலும் ஒப்பீட்டு முறையிலேயே அவன் எண்களை தரம்பிரித்தான். இதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வாறான மதிப்பீடுகள் செய்வதற்கு ஒரு கருவியின் அவசியம் அவனுக்குத் தேவைப்பட்டது. அவ்வாறான காலத்தில் தோன்றியதுதான் அபக்கஸ் (Abacus) எனப்படும் எண்கணிதக் கருவியாகும்.

அன்றைய அபக்கஸ் (Abacus) கருவிதான் இன்றைய கணினியின் முன்னோடி என சொல்ல முடியும். ஆரம்ப காலத்தில் கணினியை உருவாக வேண்டும் என்று யாரும் ஆராய்சிகள் செய்யவில்லை. மாறாக அவர்கள் நல்ல ஒரு கணக்கிடும் கருவியை உருவாக்க எண்ணினார்கள். அதன் முயற்சியின் காரணமாக கணினியின் பரிணாமம் வளர்ச்சி கண்டது.

அபக்கஸ் (Abacus)